இப்பேரணியில் இளவயது திருமணத்தை இல்லாது ஒழிப்போம்இ நேயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் போன்ற பதாதைகளை கையில் ஏந்தியவண்ணம் சென்றனர். பேரணியில் சுகாதார வைத்திய அதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர். பேரணியில் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.
வீதி ஓரங்களிலுள்ள கட்டங்கள் மற்றும் சாப்பாட்டு கடைகளில் சுகாதார விழிப்புணர்வு தொடர்பான ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டன. பேரணி நிறைவடைந்த பின்பு புனர்த்தாரனம் செய்யப்பட்டு சுகாதார வசனங்கள் பொறிக்கப்பட்டிருந்த பேரூந்து தரிப்பிடத்தை பேரணி நிகழ்வில் கலந்துகொண்ட கிரான் பிரதேச செயலாளர் திரு.கே.தனபாலசுந்தரம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டன.
