13 January 2015

TLC கல்வியக புனரமைப்பு பணிகள் நிறைவு

SHARE
சித்தாண்டி - மாவடிவேம்பு பிரதேச தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தின் படிப்பக புனரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களாக இடம்பெற்று நிறைவுபெற்றுள்ளன. 

கல்வி நிலைய பிரதி பணிப்பாளர் (நிருவாகம்) க.சிவாங்கன் தலைமையில் நடைபெற்ற  இப்பணிகளில் கல்வி நிலைய அலுவலக இணைப்பாளர் சு.சுமன் , பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டு தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

கடந்த வருடத்தில் கல்வி நிலையத்தில் கட்டுமான வேலைகள் காரணமாக கல்வியகத்தின் படிப்பகம் மற்றும் கல்வி நடவடிக்கைகள் சீரற்ற நிலையில் காணப்பட்டதுடன், தற்போது படிப்பகங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதுடன், கல்வி நிலைய நடவடிக்கைகள் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்திலிருந்து சீராக நடைபெறுவதற்குதிய ஒழுங்குகள் பிரதிப் பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது கல்வி நிலையத்தில் தரம் 7 - 11 வரையான மாணவர்களுக்கான கணித வகுப்புகள் முழுமையாக நடைபெற்று வருவதுடன், தரம் 7 , 8 மாணவர்களுக்கான விஞ்ஞான வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. அத்துடன் உயர்தர மாணவர்களுக்கான புவியியல் வகுப்புகளும் சீராக நடைபெற்று வருகின்றன. 

கல்வி நிலைய புனரமைப்பு பணிகளில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
- நிருவாகம், தவசி லேணிங் சிற்றி - 







SHARE

Author: verified_user