09 March 2015

மாவடிவேம்பு விபத்தில் சிறுமி பலி

SHARE
(Akshayan) மாவடிவேம்பு பிரதான வீதியில் நேற்று(08.03.2015) மாலை   6 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தில் மாவடிவேம்பைச் சேர்ந்த  சிறுமி ஸ்தலத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் 9 தரம் கல்வி கற்கும் மாவடிவேம்பைச் சேர்ந்த சிவயோகன் யசோதா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்றுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. இந்த விபத்தின் பின்னர் குறிப்பிட்ட வான் பிரதேச மக்களால் தீக்கிரையாகப்பபமட்டிருந்ததுடன், குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த பொலிசார் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.










SHARE

Author: verified_user