தவசி லேணிங் சிற்றியானது மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு ஒழங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவரகின்றது. அதன் அடிப்படையில் தரம் -9, 10 மாணவாகளுக்கு வருடத்தில் இரண்டு தடவைகள் திறனாய்வு அறிக்கை வழங்கும் நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றன.
குறிப்பாக வைகாசி(மே) மாதத்திலும், கார்த்திகை (நவம்பர்) மாதத்திலும் என இரண்டு அரையாண்டுகளுக்கான திறனாய்வு அறிக்கை வழங்கும் நிகழ்வுகளை இவ்வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைவாக ஆரம்ப அரையாண்டிற்கான திறனாய்வு அறிக்கை வழங்கும் நிகழ்வு கல்விநிலையத்தில் 25.05.2012 (வெள்ளிக்கிழமை)அன்று பி.ப. 5.00 மணியளவில் கல்வி நிலையத்தின் பிரதம ஆசிரியர் ச.மகேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
திறனாய்வு அறிக்கை வழங்கும் நிகழ்வில் இதுவரை காலம் இடம்பெற்ற 06 மாதாந்தப் பரீட்சைகளுக்குமான மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் தரம் 9, 10 மாணவர்களுக்கான திறனாய்வு அறிக்கையும், தரம் 11 மாணவர்களுக்கு விசேடமாகச் செயற்படுத்தப்படும் ஓயாத பரீட்சை எனும் முதல் 10 பரீட்சைகளின் மொத்தப்புள்ளிகளினடிப்படையிலும் திறனாய்வு அறிக்கைகள் வழங்கப்பட்டன.
அரையாண்டுக்கான திறனாய்வு அறிக்கை வழங்கும் இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் ஆலோசகர். திரு.சி.தில்லையம்பலம் அவர்களும், கல்வி நிலையத்தின் கலாசார இணைப்பாளராக அண்மையில் பொறுப்பேற்ற திரு. சி.கோபால் அவர்களும் கலந்துகொண்டு திறனாய்வு அறிக்கைகளை வழங்கி வைத்ததுடன், மாணவர்களுக்கு கல்வியில் முன்னேறுவதற்குரிய சில உபாயங்களையும் எடுத்துக்கூறினார்கள்.