31 October 2012

சென்னைக்கு அருகே சூறாவளி மையம்

SHARE
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த  சூறாவளி இலங்கையின் வடகீழ் கரையோரமாக நகர்ந்து தற்போது இலங்கைக்கு அப்பால் சென்று இந்தியவின் சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ளது.  இப்புயலுக்கு  "நிலம்" (Nilam) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பிற்பகல் 5.00 மணியளவில் சென்னைக்கு தென்கிழக்கே 500 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்த இச்சூறாவளியானது,  தற்போது வடக்கு – வடமேற்கு திசையாக நகர்ந்து வருவதாகவும், இன்று ஆந்திரா பிரதேசத்தினுடைய நெல்லூர் மற்றும் தமிழ்நாட்டினுடைய கடலூர் பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் எனவும்; இந்திய வளிமண்டலவியல் தினைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் வை.ஈ.ஏ. ராஜ் தெரிவித்துள்ளார்.


SHARE

Author: verified_user