21 December 2012

மட்டக்களப்பில் 5 நாட்களில் 348.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 348.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.
கடந்த 15ஆம் திகதி 60.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் 16ஆம் திகதி 102.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும்  17ஆம் திகதி 96.8 மழை வீழ்ச்சியும்  18ஆம் திகதி 71.01 மழை வீழ்ச்சியும் 19ஆம் திகதி 17.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இற்றைவரையான காலப்பகுதியில் 1529.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user