20 December 2012

வந்தாறுமூலையில் மனிதக் குழந்தையை ஈன்றெடுத்த பசு -வதந்தி

SHARE
வந்தாறுமூலையில் இன்றைய தினம் பசு ஒன்று மனிதசிசுவினை ஈன்றெடுத்தாக செய்திகள் பரவியிருந்தது. ஆனால் இந்த செய்தி ஒரு வதந்தியே தவிர உண்மையில்லை என வந்தாறுமூலையைச் சேர்ந்த நபரொருவர் தெரிவித்தார். 

உலக அழிவு பற்றிய அச்சம் நிறைந்த நாள் நாளை (21.12.2012) எனற காரணத்தினால்உலக அழிவு நிகழும் என்று அஞ்சுகின்ற மக்கள் மேலும் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு அச்சத்தில் இருப்பதன் காரணத்தினாலேயே மக்கள் மத்தியில் இத்தகைய வதந்திகள் விரைவாகப் பரவத் தொடங்கியுள்ளன. சாதாரணமாக நிகழும் இயற்கை நிகழ்வினைக் கூட உலக அழிவிற்குரிய அறிகுறி என்ற அடிப்படையில் சிலர் நம்பிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user