சித்தாண்டியில் வெள்ளநீர் படிப்படியாகக் குறைந்து வருகின்றது.

நேற்றைய தினத்திலிருந்து வெள்ளத்தினால் சூழப்பட்டிரந்த சித்தாண்டியில் இன்றைய தினம் (19.12.2012) படிப்படியாக வெள்ள நீர் குறைந்து வருகின்றது. தொடர்ச்சியாக பெய்து வந்த மழைவீழ்ச்சி சற்று ஓய்வு நிலைக்கு வந்ததனால் வெள்ளநீர்மட்டம் படிப்படியாக குறைவடைந்து செல்கின்றது. 

நேற்றைய தினம் சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்த நீரின் அளவிலைப் பார்க்கிலும் இன்றை தினம் ஒரு  அடி நீர் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போதைய நிலையில் சித்தாண்டி - 03 இலுள்ள சில பகுதிகளில் வெள்ளநீர் குறைவடைந்துள்ளதனால் நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த மக்கள் தமது உறைவிடங்களுக்கு சென்று வருகின்றனர். சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கு பின்னாலுள்ள பகுதிகளில் நீர்மட்டம் குறைவடைந்து சென்றபோதிலும் சிலவீடுகளில் நான்கு அடிவரையிலான வெள்ளநீரும் காணப்படுகின்றது.
சித்தாண்டி 04 ஆம் குறிச்சி பகுதியில் குறிப்பாக உதயன்மூலை மற்றும் மதுரங்காட்டுப் பகுதிகளில் வெள்ளநீர் குறைந்து சென்றாலும் மக்கள் சென்றுவரக்கூடிய நிலையில் இன்னும் வடியவில்லை. அப்பகுதிகளில் சுமார் ஆந்து அடிக்கும் மேலான நீர் காணப்படுவதாக குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் சித்தாண்டி 04 ஐச் சேர்ந்த பெரும்பாலானோர் தற்போதும் நலன்புரி முகாம்களிலே வசித்துவருகின்றனர்.
மழைபெய்யாத தெளிவான வானிலை ஏற்படுமாயின் நாளை காலையில் பெருமளவில் சித்தாண்டியின் பெரும்பாலான பகுதிகளில் நீர்மட்டம் விரைவாக வடிந்துவிடும் என சித்தாண்டி பிரதேசவாசி குறிப்பிட்டார்.

























Previous Post Next Post