மாவடிவெம்பின் சில பகுதிகளிலும் வெள்ளநீர் பரவி வருகின்றது. மாவடிவேம்பின் 01, 02 ஆம் குறிச்சிகளின் சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
புகையிர வீதிக்கு அருகாமையிலுள்ள தாழ்பகுதிகள், பிரதான வீதிக்கு மறுபக்கத்தில் உள்ள பகுதிகள் மற்றும் சில உள் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சித்தாண்டிப் பிரதேசத்தினைப் போன்றல்லாது மழைநீரே இப்பகுதிகளின் வெள்ளநிலைமைக்கு காரணமாக இருப்பதுடன், பிரதானவீதியை அண்டிய பகுதிகளில் ஆற்றுவெள்ளநீர் பரவிவருகின்றது.
(Photos by:- Uthayan)