10 May 2013

பறந்துசெல்லும் கார் தயாரிப்பு

SHARE
வெகுவிரைவில் சந்தையை ஆக்கிரமிக்க இருக்கிறது, தனிப்பட்ட பாவனைகளுக்கு பயன்படுத்தத்தக்க பறக்கும் கார்.  இது தொடர்பான தயாரிப்பு வேலைகளில் Terrafugia நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதன் விற்பனை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் ஆரம்பமாகிவிடும் என இவ் நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது.  இது விமானம் மற்றும் உலங்குவானூர்தி (ஹெலிகொப்டர்) தொழில்நுட்பம் இணைந்ததாக தயாரிகப்படவுள்ளது. 

முதலில் மடங்கி விரியக்கூடிய இறக்கையில் உள்ள விசிறியானது செங்குத்து திசையில் இயங்கி, பறக்கும் காரை மேல் நோக்கி தூக்கும். பின்னர் அவ் விசிறி கிடை திசையில் இயங்கி விமானத்துக்கு கிடை உந்துசக்தியை தரும். அதன் பின்னர் காரின் பின்புறம் இயங்கும் ஜெட் தொழில்நுட்ப விசிறி ஆர்முடுகலை ஏற்படுத்தும்.
இப் பறக்கும் காருக்கு TF-X என பெயரிடப்பட்டுள்ளது. இக் கார் Google இன் Self Drive காரின் கணினி இயக்கத்துக்கு ஒத்தவாறு காணப்படுகிறது. அதாவது GPS உதவியுடன் உங்கள் சிறிதளவு கட்டுப்பாட்டுடன் தன்னியக்க சக்தி கொண்டது இப் பறக்கும் கார்.

மேலதிக விபரங்களை அறிய பின்வரும் இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்:-






வீடியோ:

www.terrafugia.com/
SHARE

Author: verified_user