24 September 2013

கிரான் பிரதேச செயலகத்தினால் ஊதுபத்தி உற்பத்தி பயிற்சி செயலமர்வு

SHARE
கோளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தின் சமூக சேவைப் பிரிவினரின் ஏற்பாட்டில்  பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் சுயதொழில் உதவிக்கான ஊதுபத்தி உற்பத்திப்  பயிற்சி நெறி நேற்றைய தினம் (23.09.2013) இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசிங்கம், கிரான் வேர்ள்ட் விசன் நிறுவன முகாமையாளர் வினாயகமூர்த்தி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களான  திரு சக்திகுமார், திருமதி சக்திகுமர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 இந்நிகழ்வானது   வேர்ள்ட்விசன் நிறுவனத்தினரின் அனுசரணையுடன் நடைபெற்றதுடன் சுமார் 20 பெண்கள் கலந்துகொண்டு பலனடைந்தனர்.

















SHARE

Author: verified_user