மேற்படி நிகழ்வு பாடசாலையின் அதிபர் என்.ஆனந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா அவர்களும் கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான த.அனந்தரூபன்,திருமதி.ப.இளங்கோ,திருமதி.சா.ரவிராசா மற்றும் சிறப்பு அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான நா.குணலிங்கம்,சா.பரமேஸ்வரன், T.அமலதாஸ்,சட்டத்தரணி த.சிவநாதன் போன்றோரும் கலந்துகொண்டனர்.மேலும் இந் நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள்,அசிரியர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் முதலாவது பிரதியினை நூலாசிரியரினால் வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா அவர்களுக்கு வழங்கி வெளியீட்டுவைத்தார்.
இந் நிகழ்வின்போது நூலாசிரியர் இரா.சிவகுமாரை பாடசாலையின் அதிபர் என்.ஆனந்தன் உட்பட ஆசிரியர்களால் பாராட்டி கௌரவித்தனர்.
