18 September 2013

கிரான் பிரதேச செயலகத்தில் தாபன நடைமுறைகள் தொடர்பான பயிற்சி நெறி

SHARE
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் 2012ம் ஆண்டு அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்களில் பொருளாதார அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் தவிர்ந்த ஏனைய பட்டதாரி பயிலுனர்களுக்கு அரசசேவை தொடர்பான பயிற்சிகளை மட்டக்களப்பு மாவட்ட செயலாளரின் பணிப்புரைக்கமைய கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரதேச செயலாளர் திரு. கே. தனபாலசுந்தரம் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 
 
இதில் முதலாவது  தாபன நடைமுறைகளும் அலுவலக ஒழுங்கும் என்ற தலைப்பில்  உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.ரீ.கௌரீஸ்வரன்  அவர்களின் தலைமையில் 13.09.2013 அன்று காலை 9.30 ஆரம்பமானது. இப்பயிற்சி நெறியின் வளவாளராக திரு. தினகரன் ரவி (BA,GCS-Supra, SLEAS,MA-Pub-Admn(Hons), M.Ed(EduMgt) அதிபர், மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயம் அவர்கள் கலந்து கொண்டார். இப்பயிற்சி நெறியியில் 60 பட்டதாரி பயிலுனர்கள் கலந்து கொண்டனர். 
(மு.கிருஸ்னகுமார்)


 


SHARE

Author: verified_user