03 October 2013

கல்குடா கல்வி வலய சமூகவிஞ்ஞானப்போட்டி பரிசளிப்பு விழா 2013

SHARE
வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதான மண்டபத்தில் 27.9.2013 இல் பரிசில் சான்றிதழ் வழங்கும் வைபவம் முதல்முதலாக எமது வலயத்தில் இடம்பெற்றது. இவ்வைபவத்திற்கு எமது வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.செ.ஸ்ரீகிருஸ்ணராஜா அவர்களும், பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி சாமினி ரவிராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு வலய மட்டத்தில் நடைபெற்று வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினர்.

அத்துடன் வழிப்படுத்திய ஆசிரியர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தோடு, சான்றிதழ்களும் வழங்கி மாணவர்களை கௌரவித்தினர். மேலும் இந்த நிகழ்வை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்த வலயத்தின் வரலாற்றுப்பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான திரு.பி.நல்லரெத்தினம், திரு.த.அகிலன் ஆகியோர் இவ்விழாவினை நெறிப்படுத்தினர்.
(http://www.kalkudahzone.sch.lk/web/index.php)





SHARE

Author: verified_user