Showing posts with label பாடசாலை. Show all posts
Showing posts with label பாடசாலை. Show all posts

25 July 2023

ஆசிரியர்களுக்கு அவசியமான ஒரு புத்தகம் தரவிறக்கம்

ஆசிரியர்களுக்கு அவசியமான ஒரு புத்தகம் தரவிறக்கம்

வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உள்வாரி வெளிவாரி மதிப்பீட்டின்போது வைத்திருக்கவேண்டிய ஆவணங்களில் உள்ளீடுகளுக்குரிய ஆவணங்களும், வெளியீட்டைக் காட்டி நிற்கும் ஆவணங்களையும் அதிகாரிகள் கேட்பார்கள். அந்தவகையில் அவற்றில் பெரும்பாலானவற்றை உள்ளடக்கி ஒரு ஆசிரியர் பதட்டமின்றி, அச்சமின்றி தங்களுடைய பணியைச் செய்வதற்கு உறுதுணையாக இருப்பதற்கு வலுசேர்க்குவிதமாக இந்த "ஆசிரியர் பதிவு புத்தகம்" என்ற தொகுப்பை 2023 ஆண்டில் மேலும் சில இற்றைப்படுத்தல்களுடன் இங்கே பதிவிடுகிறேன். இவற்றை தேவையானவர்கள் பிரிண்ட் எடுத்து புத்தகமாக பயன்படுத்துங்கள். இவற்றில் சில படிவங்கள் அதிகமாகத் தேவைப்பட்டால் அதற்கேற்ற வகையில் பிரிண்ட் செய்து பயன்படுத்துங்கள்.








21 August 2021

12 December 2017

பாலர் பாடசாலைக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

பாலர் பாடசாலைக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

4.12.2017 மட்டக்களப்பு வெருகல் கல்லரிப்பு எனும் அதிகஸ்ர பிரதேசத்தில் உள்ள முன்னிலை பாடசாலை மாணவர்களுக்கான புதிய சீருடையினை முதன்முதலாக கனடாவில் வசிக்கும் சகோதரி மஞ்சு துரை அவர்கள் இன்று வழங்கியுள்ளார்கள்.சகோதரிக்கு எனது நன்றிகள். தகவல் M.தர்சன்

06 November 2016

 SLEAS பரீட்சையில் சித்தாண்டி பிரதேசத்திலிருந்து சித்தி

SLEAS பரீட்சையில் சித்தாண்டி பிரதேசத்திலிருந்து சித்தி


சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவரும், கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தில் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றி வருபவருமான திரு. சுப்பிரமணியம் - சிவராசா அவர்கள் இவ்வருடம் நடைபெற்ற இலங்கை கல்வி நிருவாக சேவையில் சேர்த்துக்கொள்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.







 சித்தியடைந்தமைக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், தொடர்ந்தும் சாதனைகள் புரியவேண்டும் எனவும் வாழ்த்துகின்றோம். இவர் கடந்த இலங்கை அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சையிலும் சித்தியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.