03 October 2013

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய கணித நாடகம்

SHARE
கல்குடா கல்வி வலயத்திலிருந்து முதல் தடவையாக ஒரு கணித நாடகம் தேசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து கனிஸ்ட பிரிவின்கீழ் கணித நாடகப் போட்டியில் கலந்து கொண்ட மேற்படி போட்டியாளர்கள் கடந்த மாதம் மாகாண மட்டப்போட்டியில் முதலிடத்தைப் பெற்று வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. 

கல்குடா வலயத்தினதும் கிழக்கு மாகாணத்தினதும் நற்பெயருக்காக பங்காற்றும் மாணவர்களுக்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் எமது இணையத்தளளம் சார்பாக வாழ்த்துக்ளை தெரிவித்துக்கொள்கின்றோம்.




SHARE

Author: verified_user