நிமிர்ந்து நில், பூலோகம் ஆகிய இரண்டு ஆக்சன் திரைப்படங்களில் ஜெயம்ரவி தற்போது மிகவும் பிஸியாக நடித்து வருகின்றார். பேராண்மை போன்ற ஆக்சன் திரைப்படங்களுக்குப் பிறகு இந்தத்திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக தனது கட்டுடலுடன் நடித்து வருகின்றார்.கட்டுடலைப் பெறுவதற்காக மிகவும் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றார். சிறுவயதிலிருந்தே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளில் ஆர்வம் காட்டிவரும் ஜெயம்ரவி ஒரு உதைபந்தாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.


