பிரிட்டனை தாக்கிக் கொண்டிருக்கும் புயல் காற்றில் இதுவரை இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரிட்டனின் தென்பகுதியை சக்தி வாய்ந்த சூறாவளி புயல் தாக்கியுள்ளது. இந்த புயலுக்கு எஸ்டி.ஜூட் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, 22,000 வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் மரங்கள் வேரோடு வீழ்ந்து காணப்படுகிறது, ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து 130 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதில் கெண்ட் பகுதியில் ஒரு சிறுவனும், வட்ஃபோர்ட்டில் ஒருவரும் புயலில் மரங்கள் வீழ்ந்ததால் பலியாகி உள்ளனர்.
மணிக்கு 99 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

