30 October 2013

தவசி லேணிங் சிற்றியின் O/L மாணவர்களுக்கான கருத்தரங்கு

SHARE
தவசி லேணிங் சிற்றியானது க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை 2013 டிசம்பரில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக தடை உடைத்தல் கருத்தரங்கு செயற்றிட்டத்தினை இவ்வருடம் நடைமுறைப்படுத்தவுள்ளது. 

இக்கருத்தரங்கில் பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்க்கான சமயம், தமிழ், புவியியல், விவசாயம், வரலாறு ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்கள் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கருத்தரங்குகள் இலவசமாக நடாத்தப்படுவதுடன், கருத்தரங்கின்போது வழங்கப்படுகின்ற கையேடுகளுக்கான கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும்.

கல்வி நிலையத்தின் தலைமைஆசிரியர் வி.எஸ்.அக்‌ஷயன் அவர்களின் தலைமையில் நடாத்தப்படும். இக்கருத்தரங்குகளில் ஆசிரியர்களாக கல்வி நிலையத்தின் ஆசிரியர் குழுவினர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கவிருக்கின்றனர்.

கருத்தரங்குகள் ஒவ்வொரு பாடத்திற்காக நடாத்தப்படவிருக்கின்றன. ஒவ்வொரு கருத்தரங்கும் வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்படவிருக்கின்றது. கருத்தரங்கில் கலந்துகொள்பவாகள் முன்கூட்டியே பதிவுசெய்துகொண்டால் மாத்திரமே கருத்தரங்கில் அனுமதி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம். பதிவுசெய்பவர்கள் ஒவ்வொரு பாடத்திற்குமுரிய கையேட்டிற்குரிய கட்டணத்தை பதிவுக் கட்டணமாகச் செலுத்தி கருத்தரங்கிற்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவேண்டும்.  இடவசயினைக் கருத்திற்கொண்டு 50 மாணவர்கள் மாத்திரமே கருத்தரங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். கருத்தரங்கு நடைபெறும் தினங்கள் பற்றிய அறிவித்தல்கள் எமது அறிவித்தல் பலகையிலும் இணையத்தளத்தின் மூலமும் அறிவிக்கப்படும்.

முதலாவதாக எதிர்வரும் 01.11.2013 அன்று காலை 9.;00 மணியளவில் சைவநெறி பாடத்திற்கான கருத்தரங்கு நடைபெறவிருக்கின்றது. இக்கருத்தரங்கினை வைபவரீதியாக சித்தாண்டி – மாவடிவேம்பு நலன்புரி அமைப்பின் தலைவர் ஆ.தேவராஜா அவர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைப்பார். இக்கருத்தரங்கிற்கு மாரிமுத்தன் செய்திகள் ஊடக வலையமைப்பு கையேடுகளுக்குரிய கட்டணத்திற்கு அனுசரனை வழங்குவதனால் 50 மாணவர்களுக்கு இலவசமாக கையேடுகள் வழங்கப்படும்.

எனவே சைவநெறி பாடத்திற்குரிய கருத்தரங்கில் கலந்துகொள்ளும் மாணவர்கள்  இன்றிலிருந்து எதிர்வரும் 01.11.2013 அன்று காலை 8.00 மணிவரையிலும்  தவசி லேணிங் சிற்றியின் தலைமையகத்தில் தங்களை பதிவுசெய்துகொள்ளவும். நைவநெறி பாடத்pற்குரிய கையேடுகளும் இலவசமாக வழங்கப்படுவதனால் இப்பாடத்திற்குரிய பதிவுக் கட்டணம் அறவிடப்படமாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

                                                       நன்றி

தகவல் : க.சிவாங்கன், திட்டமிடல் இணைப்பாளர், தவசி லேணிங் சிற்றி

SHARE

Author: verified_user