க. பொ. த உயர் தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை தட்டிக் கொண்ட கொழும்பு தேவி பாலிகா வித்தியாலய சாதனை மாணவி செஷானி குணதிலகவுக்கு இவரது ரியூசன் ஆசிரியர் குமுது லியனகே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய Honda Hybrid motor car ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.
மேற்படி ஆசியரியர் வர்த்தக பாடம் தொடர்பில் தனியார் வகுப்பொன்றை நடாத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த க. பொ. த உயர் தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற குறித்த மாணவிக்கு ஆசிரியர் காரை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளார்.
இப்பரிசளிப்பு விழா மிக பிரமாண்டமாக கொழும்பில் கடந்த நாட்களில் இடம்பெற்றதோடு இலங்கை வரலாற்றில் ஆசிரியர் ஒருவர் மாணவருக்கு வழங்கிய மிகப் பெரிய பரிசாகவும் இது பதிவானது.