08 January 2014

கட்டுமஸ்தான உடலுடன் மீண்டும் களமிறங்கும் நடிகர்

SHARE
தமிழ் சினிமாவின் அழகான ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் அரவிந்த்சாமி. ரோஜா, தளபதி நேரத்தில் பெண்களின் கனவு நாயகன் அவர். திடீரென்று சினிமாவை விட்டு விலகியவர் பல ஆண்டுகளுக்கு பிறகு கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.

தற்போது மகேஷ் மஞ்ச்ரேக்கர் டைரக்ட் செய்யும் இந்திப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து தான் நடிக்கும் தமிழ் படம் ஒன்றிற்காக சிக்ஸ் பேக், பாடி பில்டிங் என்று ஜிம்மே கதியாக கிடக்கிறார்.
அவருக்கு திமோல்தி என்பவர் பயிற்சியாளராக இருந்து மாற்றி வருகிறார். அழகன் அரவிந்த்சாமி இப்போது கிட்டத்தட்ட ஆண்அழகன் போட்டிக்கு தயாராகிற அளவிற்கு தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
“ஒரு முக்கியமான தமிழ் படத்திற்காக ஒர்க்அவுட் பண்ணி வருகிறேன். அந்த படம் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது முறைப்படி சம்பந்தப்பட்டவர்கள் அறிவிப்பார்கள்” என்கிறார் அரவிந்த் சாமி.


SHARE

Author: verified_user