07 March 2014

மாவடிவேம்பு பிரதேசத்தவருக்கு முனைப்பு நிறுவனம் உதவி

SHARE
முனைப்பு – சுவிஸ் நிறுவனத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள கொடிய நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்ட மாவடிவேம்பைச் சேர்ந்த ஒருவருக்கு சிகை அலங்கார தொழிலாளிலுக்காக துவிச்சக்கர வண்டியும் தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டன.


வீட்டில் சிகை அலங்கார நிலையத்தை வைத்து இயக்குவதைவிடவும் வேறு இடங்களுக்கு வீடுவீடாகச் சென்று தொழில் செய்வது வருமானம் ஈட்டக்கூடியதாக இருக்கும் என்று அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த துவிச்சக்கர வண்டியும் தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சுவிஸ் முனைப்பு நிறுவனத்தின் வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த பொருள்களை  ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் மற்றும் பிரதேச செயலக கணக்காள் எஸ். டேவிட், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கங்காதரன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
SHARE

Author: verified_user