08 March 2014

செங்கலடி மத்திய கல்லூரியின் தளபாடங்களை திருத்துவதற்கான உதவி கோரல்

SHARE
எமது பாடசாலைக்கு நீண்ட காலங்களாகத் தளபாடங்கள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். இதனால் பாடசாலை ஏற்கனவே பழுதடைந்த தளபாடங்களையே திருத்தம் செய்து பாவிக்கவேண்டியுள்ளது. 


இங்கு நீங்கள் பார்க்கின்ற படங்கள் அவ்வாறு பழுதடைந்து பயன்பாடற்றுக் கிடக்கும் பல நூறு எண்ணிக்கயைிலான இரும்புத் தளபாடங்களே. இவை இன்று (08-03-2014) எங்களுக்குக் அதிபரால் காண்பிக்கப்பட்டவை. ஏற்கனவே சில நன்கொடையாளர்கள் செய்த உதவியானல் சில தளபாடங்கள் திருத்திப் பாவிக்கப்பட்டுள்ளன. 

நாங்கள் இவற்றைத் திருத்துவதற்கான விலை மதிப்பீடு ஒன்றினை பெற்றுக் கொண்டோம். அதன் படி ஒவ்வொரு வகை மேசை கதிரைகளுக்கும் பலகையிட்டு, இரும்பு ஒட்டு வேலை செய்து திருத்துவதற்கான விலை மதிப்பீடு பின்வருமாறு.

A வகை மேசை ஒன்று -Rs. 3000
A வகை கதிரை ஒன்று -Rs. 1500
B வகை மேசை ஒன்று -Rs. 2800
B வகை கதிரை ஒன்று -Rs. 1300
C வகை மேசை ஒன்று -Rs. 3000
C வகை கதிரை ஒன்று -Rs. 1300

சிறுதுள்ளி பெருவெள்ளம் என்பது போல ஒவ்வொருவரும் ஒரு சில தளபாடங்களையாவது திருத்துவதற்கு உதவியளிப்பீர்காளாயின் அது பாடசாலைக்கு மிகவும் பேருதவியாக அமையும். அவ்வாறு உதவ முன்வருவோர் பழைமாணவ சங்கத்தையோ அல்லது பாடசாலை அதிபரையோ தொடர்பு கொள்ளலாம். 

- பழைய மாணவர் சங்கம் -
செங்கலடி மத்திய கல்லூரி 






SHARE

Author: verified_user