11 April 2014

சித்தாண்டியில் திவிநெகும விசேட சந்தை திறப்பு நிகழ்வு

SHARE
(Sanjee) சித்திரை புத்தாண்டை முன்னிட்டு செங்கலடி பிரதேசத்தில் மாபெரும் திவிநெகும - வாழ்வின் எழுச்சி சித்திரை புத்தாண்டு சந்தை செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் வந்தாறுமூலை மத்தியமகாவித்தியாலய பாடசாலை மைதானத்தில் இன்று 10ம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டது.



செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளரும் சமுர்த்தி பிரதிப் பணிப்பாளருமான P.குணரெத்தினம், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் முஹம்மது கனீபா, மாவட்ட திவிநெகும(சமுர்த்தி) திட்ட இணைப்பாளர் J.F.மனோகிதராஜ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இப் புதுவருட சந்தை வைபவத்தில் ஏராளமான வர்த்தகர்களும், திவிநெகும உற்பத்தியாளர்களும் வியாபாரத்தினை மேற்கொண்டனர். இதன்போது மிக அதிகளவான பொதுமக்கள் கலந்துகொண்டு பொருட்களை கொள்வனவு செய்ததனை காணக்கூடியதாக இருந்தது.

















SHARE

Author: verified_user