08 April 2014

சித்தாண்டி சித்திவினாயகர் வித்தியாலய விளையாட்டுப் போட்டி

SHARE
(Sanjee) கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட சித்தாண்டி சித்தி வினாயகர் வித்தியாலயத்தின் வருடாந்தத இல்ல விளையாட்டுப் போட்டியானது இன்று (08.04.2014) பாடசாலையின் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் திரு. க.பகீரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) திரு க.அனந்தரூபன் அவர்களும், கௌரவ அதிதியாக ஏறாவூர்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு பொ.சிவகுரு அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கௌரவ விருந்தினர்களாக காளிகோவில் பரிபாலன சபை தலைவர் ஆ.தேவராஜா, கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் , சேவ் த சில்ட்றன் நிறுவன முகாமையாளர் மு.திருக்குமரன், கண்டிகப் இண்டர்நசனல் நிறுவனத்ததின் திட்ட இணைப்பாளர் க.முரளிதரன், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களான பி.சிவலிங்கம், க.பிரதீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



































SHARE

Author: verified_user