06 April 2014

கல்குடா கல்வி வலய பெறுபேறுகளில் முன்னேற்றம்

SHARE
இவ்வருடம் வெளியாகியுள்ள க.பொ.த(சா/த) பரீட்சை முடிவுகளில் கல்குடா கல்வி வலயம் பாரிய முன்னேற்றத்தை காட்டியுள்ளது.  பெறுபேற்று முடிவுகளின் படி மட்/ககு/ செங்கலடி மத்திய கல்லூரி மாணவன் செல்வன் விஜயேந்திரன் தேவகணன் 9 ஏ சித்திகளை பெற்று கல்குடா வலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளான்.


மேலும் மட்/ககு/வாழைச்சேனை இந்துக் கல்லூரி, மட்/ககு/பேத்தாளை விபுலானந்தா, மட்/ககு/ வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம் என்பன 8 ஏ களையும், மட்/ககு/சந்திவெளி சித்திவினாயகர், மட்/ககு/கறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயம் என்பன 7 ஏ களையும், மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் 6 ஏ களையும், மட்/ககு/களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம், மட்/ககு/முறொக்கொட்டான்சேனை இ.கி வித்தியாலயம், மட்/ககு/கோரகல்லிமடு ரமணமகரிஷி வித்தியாலயம் என்பன 5 ஏ களையும், மட்/ககு/ கிரான் மகா வித்தியாலயம், மட்/ககு/கதிரவெளி விக்ணேஸ்வரா ஆகியன 4 ஏ களையும் உயர் பெறுபேறுகளாக பெற்றுள்ளன. 

இவ்வாறு பெறுபேறுகளை பெற்றுக் கொள்வதற்கு வழிவகுத்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வலயக்கல்விப்பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.
SHARE

Author: verified_user