இலங்கைக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள வளிமண்டலக் குழப்பம் காரணமாக நாட்டின் தென்மேற்கு பிராந்தியங்களில் மழை கொண்ட காலநிலை தொடரும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும். பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் நாட்டின் பல இடங்களில் இடியுடன்கூடிய மழை காணப்படும். சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பாதிவாகலாம்.
இடிமின்னல் தோன்றும் பொழுது காற்று தற்காலிகமாக பலமானதாக வீசும். இடிமின்னலின் தாக்கத்தை குறைத்துக்கொள்ளுவதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடான அம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும். ஏனைய கடல் பிராந்தியங்களில்கூட மழை காணப்படலாம்.
கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20 – 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் தென்மேற்குத் திசையிலிருந்து காற்று வீசும்.
காங்கேசன்துறை தொடக்கம் கொழும்பு, காலி, ஊடான அம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வீசுவதன் காரணத்தினால் இந்தப்பிரதேசங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் தமது கடல் நடவடிக்கையின்போது மிகவும் அவதானம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(கீழே காட்டப்பட்டுள்ள செய்மதிப் படமானது இந்தியாவின் கல்பனா 1 என்ற செய்மதியால் 2014.08.22ம் திகதி பிறபகல் 03.15ற்கப் வழங்கப்பட்டது)
க.சூரியகுமாரன்,
வளிமண்டலவியல் அதிகாரி,
வளிமண்டலவியல் திணைக்களம்.
