13 June 2015

வந்தாறுமூலையில் கண்ணகி கலை இலக்கிய விழா பண்பாட்டு பவனி -2015

SHARE




(Dilaxshan)கண்ணகி கலை இலக்கிய விழா பண்பாட்டு பவனி இன்று13.06.2015 காலை 8 மணியளவில் சித்தாண்டி முருகன் ஆலயத்திலிருந்து வாகன பேரணி மற்றும் பாடசாலை மாணவர்களுடன் வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தை 9 மணிக்கு   சென்றடைந்தது.










இந் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக தமிழ் பண்பாட்டு கலை நிகழ்சிகள் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராஜசிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பிதமையும் குறிப்பிடத்தக்கது.





இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றல்  இறைவணக்கம் மற்றும் தமிழ் மொழி வாழ்த்து என்பன இசைக்கபட்டன. பின் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.





இங்கு இது மட்டுமன்றி பாரம்பரிய பொருட்களும் பார்வைக்காக இதற்கென அமைக்கபட்ட காட்சிக் கூடங்களில் வைக்கப்பட்டிருந்தது.சமயம் சார்ந்த நூல்களும் இங்கு வைக்கபட்டிருந்தும் குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வு 14.06.2015





நாளையும் நடைபெறும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதும் சிறப்பானது.














SHARE

Author: verified_user