31 August 2017

"விறகு" - Short film Poster

SHARE

விறகு வெட்டி விற்று தமது வாழ்வாதாரத்தை நடாத்தும் தொழிலாளிகளின் வாழ்க்கை முறையினை முதன்மைப்படுத்தி நானிலம் கலைஞர் வட்டம் தயாரித்துள்ள குறும் திரைப்படம் "விறகு" ஆகும். விறகு - குறும்படத்தில் சபா, தீபன், நேசம்மா, தனு, நிதுசன் ஆகியோர் நடிக்கின்றனர். எடிட்டிங் - மிதுசன் , ஒளிப்பதிவு - சுமன், தயாரிப்பு - தேவராஜ் அவர்களும் மேற்கொள்ள குறும் திரைப்படத்தினை அக்சயன் கதை வசனம் எழுதி இயக்குகின்றார்.







 படத்தினுடைய 60 சதவீதமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் சுவரொட்டியானது இன்றைய தினம் வெளியிடப்படுகின்றது. குறும் திரைப்படத்தினை மிகவிரைவில் குறிப்பாக செப்டம்பர் மாத முற்பகுதியில் வெளியிடுமவதற்கு தயாரிப்புக் குழுவினர் முயற்சித்து வருகின்றனர். 





பொழுதுபோக்கு என்பவற்றையெல்லாத் கடந்து அடிநிலை மக்களின் வாழ்வாதார விடயங்களை எம்மிடம் உள்ள குறைந்த வளங்களைக் கொண்டு உருவாக்கப்படும் இத்தகைய குறும்படங்களுக்கு தொடர்ந்தும் நன்பர்கள், பெரியோர்கள் அனைவரதும் ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றார்கள் படத்தயாரிப்புக் குழுவினர். 





SHARE

Author: verified_user