30 October 2012

புயல் சென்னையை நோக்கி நகர்கிறது

SHARE
 "வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறி, சென்னையிலிருந்து தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது, மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் நிலையில், வடமேற்காக நகர்ந்து நாகப்பட்டினத்துக்கும் நெல்லூருக்கும் இடையே புதன்கிழமை (அக்டோபர்- 31) இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் சிலவற்றிலும் புதுச்சேரி காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


SHARE

Author: verified_user