உண்பதற்கு உகந்ததற்ற மேற்படி கவர்ஞ்சஸ் மீனினமே மிகவும் அதிகளவிலே வலைகளில் சிக்குவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இம் மீன் தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் விரிவாக்கள் உத்தியோகத்தர் ஜே.நெல்சனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, 'இந்த மீன் இனத்தை கவர்ஞ்சஸ் எனும் விஞ்ஞான பெயர் கொண்டும் அழைப்பர். இவை மட்டக்களப்பில் உற்பத்தியானவை அல்ல. அவை மத்திய மாகாணத்திலிருந்து இந்த குளத்துக்கு வந்ததாகும்' என தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் செங்கலடி பிரதேச செயலாளர் உதயசிறிதர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கங்காதரன் ஆகியோர் மீனவர்களுடன் கலந்துரையாடியதுடன் எதிர்காலத்தில் கவர்ஞ்சஸ் தொல்லையிலிருந்து மீனவர்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்தவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்கள்.
