சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் - மே 31

இன்று (31.05.2012) சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் ஆகும். சிலர் சிகரெட் போன்ற புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றார்கள். புகைத்தல்  இல்லாமல் வாழ முடியாத நிலைகூட அவர்களுக்கு உருவாகின்றது.
அத்தகையவாகள் புகைத்தலுக்காக பயன்படுத்தம் சிகரெட் ஒன்றில் எத்தகைய நச்சுப்பொருட்கள் அடங்கியுள்ளன என்பதை அறிந்துகொண்டாவது அதிலிருந்து விலகிக்கொள்வதற்கு முயற்சி செய்யவேண்டும். எமது பணத்தையும் அழித்து, எம்மையும் படிப்படியாக அழிக்கும் சிகரெட் ஒன்றில் பல்வேறு நச்சுப்பொருட்கள் அடங்கியுள்ளன.

 
1. மின்கலங்களில் பயன்படுத்தப்படும் கட்மியம் எனப்படும் உலோகம்
2. மெழுகுவர்த்தி மெழுகில் உள்ள ஸ்டீயரிக் எனப்படும் அமிலம்
3. கைத்தொழில்துறையில் கரைப்பானாக பயன்படுத்தப்படும் தொலைன்
4. பூச்சிகளை கொல்லும் திரவத்தில் பயன்படுத்தப்படும் நிக்கொடின்
5. மலசலகூட சுத்திகரிப்பானில் பயன்படுத்தப்படும் அமோனியா
6. சேற்றுநிலங்களில் உருவாகும் மெதேன்வாயு
7. நச்சுப்பொருளான ஆர்சனிக் திரவம்
8. காபனோரொட்சைட்டு
9. ஏவுகணைகளுக்குரிய எரிபொருளான மெதனோல்
10. நிறப்பூச்சு திரவம்




Previous Post Next Post