14 June 2012

பத்திரகாளியம்மன் ஆலயம் மடைப்பெட்டி எடுத்தல் நிகழ்வு - 13.06.2012

SHARE
சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளியம்மன் ஆலய சடங்கு உற்சவம் நேற்றைய தினம் (13.06.2012) அன்று மடைப்பெட்டி எடுக்கும் நிகழ்வுடன் ஆரம்பித்தது.
இந்நிகழ்வில் கடந்த வருடங்களை விட சிறப்பாக உற்சவத்தை நடாத்துவதற்கு ஆலய நிருவாகம் தீர்மானித்துள்ளதுடன், ஆலய அலங்கரிப்புக் குழுவினர் மிகவும் சிறப்பாக தமது சோடனை நடவடிக்கைகளின் மூலம் ஆலயத்தினையும் வீதிகளையும் மிகவும் அழகாக அலங்கரித்துள்ளனர். இதேவேளை ஆலய அலங்கரிப்புக்குழுவின் தலைவர் ரவிச்சந்திரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் "ஆலய அலங்கரிப்புக்கான பணிகளை மிகவும் சிறப்பாக மேற்கொள்வதாயின் பணவசதி படைத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அலலங்கரிப்புக்கான பொருட்களை வழங்குவதோ அல்லது அதற்குரிய உதவிகளைச் செய்வதன்மூலமோ சிறப்பாக அமையும்'' என்று கூறினார்.
(படஉதவி:- தவசீலன்)









SHARE

Author: verified_user