யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், மூடப்பட்டிருந்த குடும்பி மலை வனப்பகுதி மக்களின் பாவனைக்காக எதிர்வரும் நாட்களில் திறந்து விடப்படவுள்ளது. கிழக்கு இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் லால் பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதியினுள், இதனை மக்களின் பாவனைக்காக திறந்து விட திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு குடும்பி மலையை அண்டிய பிரதேசங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு, பிரதேசத்தை பார்வையிட்டதன் பின்னரே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். கிழக்கு மாகாண வரலாற்றில் குடும்பிமலை கலாசார பூங்காவாக மாற்றும் செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு எல்லைப்பகுதியா இந்த குடும்பி மலை விளங்குகிறது. கடல்மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில், இந்த பிரதேசம் அமைந்துள்ளது.