மட்டக்களப்பு அரசாங்க அதிபரை வேலையற்ற பட்டதாரிகள் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 2010, 2011 களில் பட்டம் பெற்றுக்கொண்ட பட்டதாரிகள்  தமக்கும் பட்டதாரி நியமணங்களை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று (25.06.2012) அரசாங்க அதிபரை சந்தித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாதத்தில் பட்டதாரி பயிலுனர்களாக சேர்த்துக்கொள்வதற்குரிய நேர்முகப் பரீட்சைகள் கச்சேரியில் இடம்பெற்றது. இதில் 2011 ஆம் ஆண்டு வரையில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் 2009 ஆம் ஆண்டுகள் வரையில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கே நியமணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனைக் கருத்திற்கொண்டு 2009 இற்கு முன்னரான 1350 பட்டதாரிகளுக்கு நியமணம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2010, 2011 பட்டம் பெற்றவர்களுக்கு இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தில் நியமணங்கள் வழங்கப்படும் எனவும் உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்றைய தினம் வெபர் விளையாட்டரங்கில் காலை 9.00 மணியளவில் கூடிய சுமார் 200 பேர் வரையிலான 2010, 2011 இல் பட்டம் பெற்ற பட்டதாரிகள் இத்தடவையிலேயே தங்களையும் உள்வாங்கிக்கொண்ணவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மகஜரினை தயாரித்து, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் அவர்களிடம் கையளித்தனர்.






Previous Post Next Post