இன்று இணையத்தளத்தினைப் பாவிப்பவாகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அதுவும் குறிப்பாக கையடக்கத் தொலைபேசிகளில் இணையத்ததைப் பாவிப்பவாகளின் எண்ணிக்கையும் இன்று அதிகிரித்து வருகின்றது. இதற்குக் காரணம் எந்த இடத்திலும், இலகுவாக கொண்டு செல்லக்கூடியதும், குறைந்தசெலவும் முக்கிய காரணங்களாகும்.
தமிழ் யுனிகோட்டில் எழுதப்பட்ட வலைப்பக்கங்களை எல்லாத் தொலைபேசிகளிலும் தமிழ் மொழியில் பார்வையிட முடியாது போகின்றது. தமிழ் யுனிகோட்டில் உள்ள வலைப்பக்கங்கள் பெட்டி பெட்களாகவே காட்சியகின்றன. இந்த சிக்கலைத் தவிர்க்கிறது மொபைல்தாலைபேசிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட ஒபெரா மினி வ்றவுசர் (Opera Mini Browser) எனும் மென்பொருள் ஆகும்.
1. முதலில் உங்கள் கையடக்கத் தோலைபேசிக்கூடாக ஒபெராவின் இணையத்தளம் (http://www.opera.com/) சென்று மொபைல் பதிப்பினை தரவிறக்கி இன்ஸ்ரோல் செய்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அந்த பிறவுசரை திறந்து தமிழ் யுனிகோட்டில் உள்ள ஒரு வலைத்தளத்தை பார்வையிடுவீர்களானால் உங்களுக்கு ஏற்கனவே சாதாரண பிறவுசரில் வந்ததைப் போன்று எழுத்துக்கள் பெட்டிகள் போன்றே காட்சியளிக்கும். அதாவது பின்வருமாறு வரும்.
2.இரண்டாவதாக நீங்கள் பிறவுசரின் முகவரி ரைப் செய்யும் வாரில் பின்வருமாறு ரைப் செய்து எண்டர் செய்யுங்கள்.
3. நீங்கள் இப்போது புதிதாக ஒரு செட்டிங் மெனுவை காணமுடியும். இது "Power -User Setting" எனப்படும். இதில் நீங்கள் "Use bitmap fonts for complex scripts" என்பதில் உள்ள தெரிவில் "Yes" என்பதை தெரிவு செய்யுங்கள்.
4. பின்னர் அப்படியே மெனுவின் அடியில் உள்ள "Save" எனும் பகுதியை கிளிக் செய்து சேமித்து விடுங்கள்.
5. இப்போது நீங்கள் விரும்பிய தமிழ் வலைப்பக்கங்களின் முகவரிகளை ரைப்செய்து தமிழ் யுனிகோட்டில் பார்த்து மகிழலாம்.