நிமிடத்துக்கு 4000 லீற்றர் நீரை வெளித்தள்ளும் பாரிய நீர் ஊற்று ஒன்றை புவிச்சரிதவியலாளர்கள் ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளனர். 217 அடி ஆழத்திலிருந்து பெரியதோர் கற்பாறையை துளைத்தபோதே இந்த நிலக்கீழ் ஊற்று வெளிப்பட்டுள்ளது.
இந்த ஊற்றிலிருந்து 20 அடி உயரத்துக்கு நீர் சீறியடிக்கின்றது. இவ்வாறானதொரு ஊற்று கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.
மேற்படி நீரை பரிசோதித்ததன் பின்னரே அது குடிப்பதற்கு உகந்ததா? இல்லையா? ஏன தீர்மானிக்க முடியும் என்று சிரேஷ்ட புவிச் சரிதவியலாளரான உபுல் விக்ரமரத்ன தெரிவித்தார்.
தொடர்ச்சியான வறட்சியினால் உண்டான நீர்த் தட்டுப்பாட்டினால் வருந்திய மக்கள் இதை ஒரு வரப்பிரசாதமாகக் கருதுகின்றனர்.
(Source:- http://www.tamilmirror.lk/)