புவியினுடைய இடையோடு (மான்ரில்) பகுதியை அடைய விஞ்ஞானிகள் திட்டம்

சர்வதேச விஞ்ஞானிகளினுடைய குழு ஒன்று இடையோட்டு பகுதியினை துளையிட்டு அடைய முடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்நடவடிக்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளனர். 


இடையோட்டிலிருந்து நேரடியான மாதிரிகளைப் பெறுவதே சமுத்திர ஓட்டினூடாக துளையிட்டு மேல்இடையோட்டுப் பகுதியை அடைவதனுடைய முக்கியநோக்கமாக உள்ளது. இது தவிர புவித் தொகுதிக் கல்வியினுடைய விஞ்ஞான ரீதியிலான வேறுபாடு மற்றும் புவிக்கோளின் பரினாமம் மற்றும் தோற்றம் எ;னபவற்றை அறிதலும் இதனுடைய பிற நோக்கங்களாக அமைகின்றன.

சமுத்திர ஓடானது, கண்ட ஓட்டினை விட தடிப்பளவில் குறைவாக உள்ளதனாலேயே சமுத்திர மேற்தளத்திலிருந்து இடையோடு துளையிடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது சமுத்திர ஓட்டினுடைய தடிப்பானது 5- 6 கிலோமீற்றர்கள் தடிப்பாக இருக்கின்றபோது கண்ட ஓட்டினுடைய தடிப்பானது 25 – 70 கிலோமீற்றர்கள் வரையில் அதிகரித்துக் காணப்படுகின்றது. 

இடையோடானது 3000 கிலோமீற்றர்கள் வரையிலான தடிப்பினையும், இடையோட்டுப் பாறைக்கலங்கள் புவியினுடைய மொத்தக் கனவளவில் 84 சதவீதத்தினையும் கொண்டுள்ளன. இப்பகுதியானது உருகிய நிலையிலுள்ள பாறைகளைக் கொண்டுள்ளது.

2002 இல் யப்பானால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயறிட்டத்தினால் கூட 10 கிலோமீற்றர் வரையிலான ஆழத்தையே அடைய முடிந்தது. தற்போதைய துளையிடும் நோக்கத்திற்காக மூன்று பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அமெரிக்காவினுடைய கோகோஸ் தகடு, கலிபோர்னியாவின் வாஜா, மற்றும் ஹவாய் ஆகிய மூன்று பகுதிகளுமே இங்கு துளையிடுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால் இடையோட்டினை அடைவதற்கு பல வருடங்கள் எடுக்கலாம் என நம்பப்படுகின்றது. 2020 ஆம் அண்டிற்கிடையில் தனது இலக்கினை இந்த ஆய்வுவிஞ்ஞானிகள் கழு அடைய வேண்டுமாயின் தற்போதிருந்தே முழுவீச்சுடன் செயற்பட வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.







Previous Post Next Post