மட்டக்களப்பு கிழக்கு வானத்தில் அதிசயம்

மட்டக்களப்பு பிரதேசத்தில் இவ்வருடத்தில் பல காலநிலை மற்றும் பௌதீகவியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக அனர்த்த ஆபத்துடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் அதிசயங்களும் இடம்பெற்று வருகின்றன. 

அந்தவகையில் இவ்வருடத்தில் மட்டக்களப்பில் அதிக தடவைகள் பலமான காற்று (High wind) மற்றும் மினி சூறாவளி (Mini Cyclone) நிகழ்வுகள் இடம்பெற்றன. 

அதே போன்று அண்மையில் தொடர்ந்தும் மட்டக்களப்பின் கடற்கரையோரங்களில் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்கத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் நேற்றைய தினம் 20.10.2012 அன்று மட்டக்களப்பின் கீழ் வானில் வித்தியாசமான ஒரு உருவமமைப்பு தோன்றியிருந்தது.

தொடர்ச்சியாக இடம்பெறும் அசாதாரணமான நிலைமைகள் காரணமாக அனர்த்த அச்சநிலையிலுள்ள மக்கள் தொடர்ந்தும் பீதியல் காணப்படுகின்றார்கள்.




Previous Post Next Post