மட்டக்களப்பில் மீன்கள் கரையொதுங்குவதின் மர்மம்?

கிழக்கு மாகாணத்தின் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கடல் மீன்பிடி பிரதேசங்களில் மீன்கள் இறந்து கரையொதுங்கும் நிகழ்வு பற்றிய செய்திகள்  இலங்கையில் அண்மைக்காலமாக பரப்பாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது. இந்த கட்டுரையானது மீன்கள் கரையொதுங்குகின்ற இந்த அசாதாரண நிகழ்வு பற்றி ஆராய முற்படுகின்றது.

இலங்கையின் கிழக்கு மகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டமானது நன்னீர் மற்றும் உவர்நீர் மீன்பிடிக்கு சிறந்த கடல்வளத்தையும், ஆறுகள், வாவிகள் மற்றும் குளங்கள் போன்றவற்றையும் கொண்ட ஒரு வளமான பிரதேசமாகக் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடாக் கடற்பரப்பு காணப்படுகின்றது. இத்தகைய நீண்ட கடற்கரையோரத்தைக் கொண்ட மட்டக்களப்பில் பல இடங்களில் கடல் மீன்பிடித் தொழில் சிறப்பாக இடம்பெறுகின்றது. 

கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பின் காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, நாவலடி, கல்லடி, களுவன்கேணி, சவுக்கடி முதலிய மீன்பிடி பிரதேசங்களில் தொடர்ச்சியாக அதிகளவில் மீன்கள் பிடிக்கப்பட்டு வந்ததுடன், அந்தநிலைமை சற்று மாறி அதிகளவில் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. மீன் மற்றும் உயிரினங்கள் கரையொதுங்கி வருவதற்கான காரணங்கள் பல்வேறு தரபப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பினவரும் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இக்கருத்துக்கள் உத்தியோக பூர்வமானவையாகவும் அதேவேளை சில உத்தியொகபூர்வமற்றவையாகவும் இருக்கின்றன.
1.    தேசிய கடல்வள ஆராய்ச்சி நிலையத்தின் மட்டக்களப்பு அலுவலகம் - ஆழ்கடல் பகுதிகளில் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் ஒட்சிசன் குறைபாட்டினாலேயே அவை உயிரிழந்து கரையொதுங்குகின்றன.
2.    கிழக்குப் பல்கலைக்கழக விலங்கியல் பிரிவு -  மீன்களுக்கு ஒரு வகையிலான வைரஸ் தொற்று காரணமாகவே அவை கரையொதுங்குகின்றன.
3.    மீனவ வர்த்தகர்கள் - கடலில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் அல்லது பருவ மாற்றங்களினாலேயே மீனகள் கரையயொதுங்கின்றனவே தவிர நோய்கள் எதுவுமில்லை.
4.    அனர்த்த அச்சமுள்ள மக்கள் - சுனாமி அல்லது இயற்கையான விபரீதம் ஒன்றிற்கான எச்சரிக்கையாகவே இவ்வாறு அவை உயிரிழந்து கரையொதுங்குகின்றன.

இது இவ்வாறிருக்க பொதுவாக மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதற்கு பின்வருவன காரணங்களாக அமையும்.

1.    ஒட்சிசன் குறைவடைதல் - பொதுவாக ஒட்சிசனானது ஊடுபரவல் மூலம் நீரினுள் நுழைகின்றது. நீரில் கரைந்திருக்கக் கூடிய ஒட்சிசனின் அளவானது நீரின் வெப்பநிலை வளிமண்டல அழுத்தம் மற்றும் நீரின் இரசாயண இயல்பு முதலியவற்றில் தங்கியுள்ளது. குறிப்பாக கடல்நீரில் ஒருலீற்றருக்கு 8 மில்லிகிராம் ஒட்சிசனும், நன்னீரில் 9 மில்லிகிராம் ஒட்சிசனும் அதிக பட்சமாக கரைந்திருக்கும். அதேபோன்று 20 பாகை செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் செல்கின்ற ஒவ்வொரு 10 பாகை செல்சியல் வெப்பநிலை அதிகரிப்பினாலும், லீற்றருக்கு 1 மில்லிகிராம் என்ற அளவில் ஒட்சிசன் அளவு குறைவடைந்து செல்கின்றது. பொதுவாக குளிர்நீரில் வாழும் மீன்கள் 8 மில்லிகிராமை விட ஒட்சிசன் செறிவு குறைவடைந்தாலும் தம்மை பாதுகாத்துக் கொள்ளும். ஆனால் வெப்பமான நீரில் வாழ்கின்ற மீன்கள் 5 மில்லிகிராமிற்குக் குறைவாக ஒட்சிசன் குறைவடையும்போது அங்கு அவை உயிரிழக்க நேரிடுகின்றது.

2.    நோய்கள் ஏற்படுதல் - சமுத்திரப் பகுதிகளில் வாழம் மீன்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படுகின்ற நோய்களினாலும் இறந்து கரையொதுங்குகின்றன. சமுத்திர நீரில் சிறிய புழுக்கள், புறட்டோசான்ஸ் போன்ற ஒட்டுண்ணிகள் மற்றும் பங்கசு கிருமிகளும் கடலில் காணப்படுகின்றன. இத்தகையவற்றினாலும் பல்வேறுபட்ட நோய்கள் கடல்வாழ் மீன்களுக்கு ஏற்பட்டு உயிரிழக்கின்றன. அவ்வாறு தொற்று நோய்களினால் பாதிக்கப்பட்ட மீனினங்கள், சோர்வடைந்த நிலை, உடலில் காயங்கள் தோன்றுதல், தலைவீங்குதல் போன்ற அறிகுறிகளுடன் காணப்படும்.

3.    நச்சுப் பொருட்கள் - கடலில் கலந்துள்ள பல்வேறுபட்ட நச்சுப் பொருட்களினாலும் மீனினங்கள் உயிரிழக்கும். விவசாய நில கழுவுநீரோட்டம், கழிவுநீர் சேர்தல், இரசாயணக் கசிவுகள், அபாயகரமான கழிவுகள் முதலியன கடல் நீரில் கலப்பதன் ஊடாக நச்சுத்தன்மையை அடைந்த நீரினை உட்கொள்வதன் மூலம் மீனினங்கள் இறக்கலாம். அத்துடன் டைனமிற் மற்றும் நச்சுக் குண்டுகள் மூலம் மீன்பிடிப்பதனாலும் உயிரினங்கள் அழிவடைகின்றன.

4.    பாசி திரள்கள் மற்றும் சிவப்பு அலைகள் - பாசி திரள்கள் (அல்காக்கள்) மற்றும் சிவப்பு அலைகள் (Red Tides) முதலிவற்றினாலும் மீனினங்கள் உயிரிழக்கலாம். அல்காப் படிவுகள் பெரியளவில் சமுத்திரமேற்பரப்பில் காணப்படுவதனால் அவை சூரிய ஒளியை ஊடுகடத்துவதில் தாமதத்தை ஏற்படுத்துவதுடன் ஒட்சிசனின் குறைவடைவதற்கும் வழிவகுக்கின்றது. அத்துடன் சிலவகை அல்காக்கள் நச்சுத்ததன்மையையும் உற்பத்தி செய்கின்றன.  இதனால் மீனினங்கள் அழிவடைகின்றன. அதேபோன்று ரெட் டைட்ஸ் எனப்படும் சிவப்பு அலையானது algal bloom of Karenia brevis என்பதன் பெயராகும். இந்த சிவப்பு அலையானது சமுத்திரத்தின் உள்ளே செங்கபில நிறத்திலான ஒரு நச்சுக் கலவையை உருவாக்குகின்றது. இக்கலவையின் காரணமாக மீனினங்கள் சுவாசிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றன. இதனால் பல மீனினங்கள் உயிரிழக்கின்றன.


5.    வெப்பநிலையில் ஏற்படும் விரைவான மாற்றம் - கடல்மேற்பரப்பு வெப்பநிலைகளில் ஏற்படுகின்ற விரைவான வெப்பநிலை மாற்றத்தினாலும் மீனினங்கள் இறக்கின்றன. பொதுவாக குளிர்ச்சியான நீரானது அதிக ஒட்சிசனைக் கொண்டுள்ளது. இவ்வாறிருக்கையில் திடீரென வெப்பநிலை அதிகிரிக்கின்றபோது அப்பிரதேசத்தில் ஒட்சிசன் அளவு குறைவடைவதுடன், அத்திடீர் மாற்றத்தை மீனினங்கள் சகித்துக் கொள்ளமுடியாமலும் உயிரிழக்கின்றன.

இத்தகைய பல காரணங்களினால் கடலில் வாழம் மீனினங்கள் இறந்து போகலாம் என்று கூறப்படுகின்றது.




நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமைத்துவ இயக்குனரின் மட்டக்களப்பில் மீன்கள் கரையொதுங்குவதற்கான விளக்கம். 


கிழக்கில் கரையொதுங்கும்மீன்களில்நச்சுத்தன்மைஇல்லை. ஒட்சிசன்குறைபாட்டினாலேயேஅவைஇறந்துள்ளன. இந்தமுடிவுஇரசாயனப்பகுப்பாய்விலிருந்துஎடுக்கப்பட்டுள்ளதாகதேசியநீரியல்வளஆராய்ச்சிமற்றும்அபிவிருத்திமுகாமையின்இயக்குநர்கலாநிதிகா.அருளானந்தன்அறிவித்துள்ளார்.
ஜுலை மாதம் ஆரம்பமாகியதென்மேல்பருவப்பெயர்ச்சிக்காற்றின்காலம்முடிவடைந்துநவம்பர்,டிசம்பர்மாதமளவில்வடகீழ்பருவப்பெயர்ச்சிக்காலம்ஆரம்பமாகவுள்ளது.

எனவேதற்போதுஅந்தஇரண்டுக்கும்இடையில்உள்ளகாலமேஇடைப்பருவப்பெயர்ச்சிக்காற்றுக்காலமாகும். தென்மேல்பருவப்பெயர்ச்சிக்காலத்தில்கடல்நீரோட்டமானதுஅரேபியன்தீவிலிருந்துஇலங்கையின்தெற்கு,கிழக்குகடற்பகுதியூடாகவங்காளவிரிகுடாவைஅடையும்.

இதேபோல்வடகீழ்பருவப்பெயர்ச்சிக்காலத்தில்மீண்டும்திசைமாற்றமடைந்துவந்துபாதையூடுகடல்நீரோட்டம்திரும்பிச்செல்லும். இவ்வாறுகடல்நீரோட்டம்திசைமாற்றம்அடையும்காலமேதற்போதயஇடைப்பருவப்பெயர்ச்சிக்காற்றுக்காலம்.

இந்தக் காலத்தில்ஆழ்கடலிலுள்ளகுளிர்நீர்கடற்கரையைநோக்கிவரும். இதனால்கரையோரநீரின்வெப்பம்குறையும். அப்படிகுறைந்தவெப்பத்திலுள்ளநீர்"அல்கேபிளம்ஸ்' எனப்படும்மிகநுண்ணியதாவரங்களைத்தோற்றுவிக்கும்அளவுக்குஅதிகமாககரையோரத்தில்பல்கிப்பெருகும்""அல்கே பிளம்ஸை' உட்கொள்ளகடலிலுள்ளசிறியமீன்கள்கரையைநாடும்.கூடவே அச்சிறியமீன்களைத்தேடிஉண்ணபெரியமீன்களும்வந்துவிடும்.

ஆனால்இந்தநுண்ணியதாவரங்கள்ஒளித்தொகுப்பில்ஈடுபடுவதற்காகநீரிலுள்ளஒட்சிசனைமுற்றாகஉறிஞ்சிக்கொள்ளும். வந்தமீன்கள்சுவாசிக்கஒட்சிசன்இன்றிஉயிரிழந்துவிடுகின்றன. அத்தோடுநின்றுவிடாமல்குறுகியஆயுள்காலம்கொண்டஇந்தஅல்கேபிளம்ஸ்கள்இறந்தநிலையில்கடலின்அடியில்சென்றுபிரிகையடைகின்றன.

பிரிகைக்குத்தேவையானஒட்சிசனைகடலுக்குஅடியிலுள்ளநீரிலிருந்தும்உறிஞ்சிக்கொள்கின்றன. எனவேகடலுக்குஅடியிலுள்ளபெரியஇனமீன்களும்சுவாசிக்கஒட்சிசன்இன்றிஉயிரிழக்கின்றன. இதுவேதற்போதுநிகழ்ந்துள்ளமாற்றத்துக்குக்காரணம்.

Source:-
 


(B.S. Akshayan)
Previous Post Next Post