31 October 2012

மாமல்லபுரத்தை கடந்தது நீலம் புயல்

SHARE
நீலம் புயல் சென்னை மகாபலிபுரம் கடற்கரையில் கரையை கடந்தது , சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மி்ன்சாரம் துண்டிக்கப்பட்டது. நீலம் புயலால் பெருமளவு ரயில்பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரீனாவில் கடல் சீற்றம் இன்னும் குறையவில்லை.


வங்கக்கடலில் உருவான நீலம் புயல் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து ஆந்திரா நோக்கி செல்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழும்புகின்றன. புயல் கரையை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையடுத்து புயல் மாமல்லபுரம் அருகே கரைகடந்தது. இதனால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது.


மரங்கள் வேரோடு சாய்ந்தன:நீலம் புயல் சீற்றம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின்சார கம்பங்கள் சேதமடைந்தன. இதையடுத்து சென்னை மாமல்லபுரத்தில் இருந்து அடையாறு வரை தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
(நன்றி :- www.dinamalar.com)









SHARE

Author: verified_user