09 October 2012

விஷ்னு மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தினம் - 09.10.2012

SHARE
மட்டக்களப்பு, வந்தாறுமூலை விஷ்னு மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று (09.10.2012) பாடசாலை மாணவர்களினால் சிறப்பாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு அதிதிகளாக கல்குடா கல்வி வலய பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி அவர்களும், ஏறாவூர் பற்று கோட்டக் கல்வி அதிகாரி திரு ம.சுகுமார் அவர்களும் கலந்து  சிறப்பித்தார்கள். 

 நிகழ்வுகளின் போது அதிதிகளுக்கு பாடசாலையின் அதிபரினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன், அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். அதே வேளை பாடசாலையின் ஆசிரியர்களினால் பல்வேறு கலை நிகழ்வகளும் இடம்பெற்று நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.












SHARE

Author: verified_user