18 November 2012

மட்டக்களப்பில் இன்னும் சில நாட்களில் அடைமழை தொடரும்.

SHARE
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு பிரதேசத்தில் பெய்து வந்த அடைமழை நேற்றையை தினத்துடன் ஓய்வுக்கு வந்துள்ளது. தற்போதைய மழைவீழ்ச்சியற்ற தன்மை இன்னும் சில தினங்களுக்கு தொடரும். குறிப்பாக எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் தொடரக்கூடும்.

 எதிர்வரும் வெள்ளிக் கிழமை (23.11.2012) தொடக்கம் மீண்டும் அடைமழை பெய்யத் தொடங்கும் என  www.foreca.com எனும் செய்மதி விம்பங்களை அடிப்படையாகக் கொண்ட வானிலை எதிர்வுகூறல் பணிமனை தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை வளிமண்டலவியல் தினைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை எதிர்வுகூறலின்படி கிழக்கு கரையோரங்களில் சிறிதளவிலான மழைவீழ்ச்சி நாளைய தினம் இடம்பெறும் எனக் கூறியுள்ளதுடன், நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பெருமழை நிகழும் எனவும் அறிவித்துள்ளது. குறிப்பாக , சப்கமுவா, மத்திய, ஊவா  போன்ற மாகாணங்களில் இத்தகைய இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி நிகழும் என அறிவித்துள்ளது.



Source:-


SHARE

Author: verified_user