25 November 2012

சித்தாண்டியில் இரட்டைக் கிளைத் தென்னைமரம்

SHARE
ஒரேயொரு தண்டினைக் கொண்ட மரங்களாக தென்னை,  பனை, கமுகு முதலியன காணப்படுகின்றன. ஒரு சில இடங்களில் அபூர்வமாக இவற்றை இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிளைகளுடன் காணக்கூடியதாகவுள்ளது. அந்தவகையில் சித்தாண்டி பிரதேசத்திலும் இரண்டு கிளைகளுடன் கூடிய தென்னை மரம் காணப்படுகின்றது.

சித்தாண்டி ஏழுகடை எனப்படும் கட்டடத் தொகுதிக்குப் பின்னால் இரண்டு கிளைகளுடன் கூடிய தென்னை மரத்தை அவதானிக்கலாம். தென்னை மரங்கள் இரண்டு கிளைகளுடன் வேறு சில இடங்களில் இருந்தாலும் எமது சித்தாண்டி பிரதேசத்திலும் இம்மரம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.








SHARE

Author: verified_user