20 November 2012

சித்தாண்டியில் இன்று மின்வெட்டு

SHARE
இன்று (20.11.2012) மட்டக்களப்பு மாவட்டத்தின் 30 இடங்களில் மின்வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரையிலான எட்டு மணித்தியாலங்களுக்கு மின்தடை ஏற்படுமென அறிவித்துள்ளது.

சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, உன்னிச்சை, ஆயித்தியமலை, பங்குடாவெளி, இலுப்படிச்சேனை, மரப்பாலம், கரடியனாறு, இராஜபுரம், கித்துல், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, தும்பாலஞ்சோலை, ஐயங்கேணி, மிச்சி நகர், தளவாய், மீராகேணி, சதாம் ஹுசைன் கிராமம், ஹிஸ்புல்லா கிராமம், கொம்மாதுறை, செங்கலடி, களுவங்கேணி, ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, திருப்பெருந்துறை மற்றும் ஊறணி ஆகிய இடங்களிலேயே மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user