20 November 2012

மந்திர மலைக்குச் சென்றால் உலக அழிவிலிருந்து தப்பலாம்

SHARE
உலக அழிவு இடம்பெறும் என நம்புகின்ற மக்களினால் எதிhவரும் டிசம்பர் 21 நெருங்க நெருங்க அச்ச உணர்வும் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் பிரான்சில் வாழுகின்ற ஒரு வகையான கலாச்சார குழுவினரும் எதிர்வரும் டிசம்பர் 21 இல் உலக அழிவு இடம்பெறும் என நம்புகின்னர். இதனால் தமது உயிரை உலக அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பிரான்சில் இருக்கும் மந்திர மலைப்பகுதிக்குச் செல்வதற்கு முயற்சித்து வருகின்றனர். 
 
பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள புக்காரச் எனும் கிராமத்தில் இம் மந்திர மலை அமைவு பெற்றுள்ளது. உலக அழிவு இடம்பெறும்போது , இம் மந்திர மலைக்கு வேற்றுக் கிரக வாசிகள் வந்து அங்கிருக்கும் மக்களைக் காப்பாற்றுவர் என்பது இவர்களுடைய எண்ணமாகும். இதன் காரணமாகவே மந்திர மலைக்குச் செல்வதற்கு குறிப்பிட்ட உலக அழிவை நம்புகின்ற மக்கள் முயற்சித்து வருகின்றனர்.


SHARE

Author: verified_user