20 December 2012

மட்டக்களப்பில் வெள்ளத்தால் 135,640 பேர் பாதிப்பு!

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் 34,150 குடும்பங்களைச் சேர்ந்த 135,640 பேர் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

12,453 குடும்பங்களைச் சேர்ந்த 49,993 பேர் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறி நண்பர்கள் மற்றும்  உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளது.
SHARE

Author: verified_user