02 December 2012

வீடியோ இணைப்பு:- பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு – 2012

SHARE
சித்தாண்டி – மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் இவ்வருடம் (2012) மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வின் ஒளிப்படங்களை எமது இணையத்தளத்தில் மடைப்பெட்டி எடுக்கும் வைபவம், தீப்பாய்தல் நிகழ்வு முதலிய தலைப்புகளில் பிரசுரித்திருந்தோம். வீடியோ எடுக்கக்கூடிய வசதியின்மையினால் உடனடியாக சில காணொளி காட்சிகளை எம்மால் இணையத்தளத்தில் வெளியிடமுடியவில்லை.

வெளிநாட்டில் வாழ்கின்ற எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் காணொளியினை இணையத்தளத்தில் தரவேற்றும்படி கேட்டிருந்தார்கள். அதற்கமைவாக இந்த காணொளியினை எமக்கு ஆலய அலங்கரிப்புக் குழுவினர் கடந்த புரட்டாதி மாதமளவில் (அக்டோபர்) வழங்கி உதவியிருந்தார்கள். இந்தவேளையில் ஆலய சடங்கு நிகழ்வின் காணொளியினை தந்துதவிய ஆலய அலங்கரிப்புக் குழுவினருக்கு எமது நன்றிகள்.

இணையத்தள இணைப்பு தொடர்பாக எமது இணையத்தளம் எதிர்நோக்கிய இடையூறுகள் காரணமாக அலங்கரிப்புக் குழுவினர் வழங்கிய காணொளியினை உடனடியாக  தரவேற்றமுடியவில்லை. இருந்தும் அதனை தாமதமாகவேனும்  தரவேற்றி  எமது பிரதேசத்தினை இணைய உலகில் வெளிப்படு;த்தவேண்டும் என்ற நோக்குடன் இதனை நாம் செய்து வருகின்றோம்.

இங்கு காணொளியின் ¾ பகுதி இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் மீதி பகுதியையும் தரவேற்றுவோம்.

Part01


Part02


Patr03


Part04



SHARE

Author: verified_user