01 December 2012

அம்பாறையில் சில பிரதேசங்களில் நில அதிர்வு

SHARE
அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஒருவகை நில அதிர்வு உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


அம்பாறையில் தமண, மடினாகம, கிவுலேகம, பொல்கஸ்ஹார, தேவாலகித ஆகிய பகுதிகளில் சிறிய அதிர்வு உணரப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாறைக்கு வெடி வைத்து தகர்த்தல் போன்ற மனித செயற்பாடுகளால் இந்த அதிர்வு உணரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


SHARE

Author: verified_user