08 December 2012

வந்தாறுமூலை விஸ்னு மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா

SHARE
மட்டக்களப்பு, கல்குடா வலயத்தினுள் அடங்கும் வந்தாறுமூலை விஸ்னு மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (07.12.2012) பாடசாலையின் அதிபர் திரு. க.சிறிதரன் அவாகளின் தலைமையில் இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் அவர்களும், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி  சுபா சக்கரவர்த்தி அவர்களும், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஞானலிங்கம் அவர்களும்,  ஏறாவூர் கோட்டக் கல்வி அதிகாரி திரு ஏ.சுகுமாரன் அவர்களும்  கலந்து கொண்டனர்.

நிகழ்வுகளின்போது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலையின் வருடாந்த சங்சிகையான 'ஏர்' எனப்படும் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.
நிகழ்வுகளில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.














(Photo by:- Thanus)


SHARE

Author: verified_user